India
ஒரு பெண் எம்.பி-யை நடத்தும் முறை இதுதானா?- பா.ஜ.க எம்.பியால் மக்களவையில் தாக்கப்பட்ட தலித் எம்.பி ஆவேசம்!
நாடாளுமன்றத்தின் இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலையில் கூடியதில் இருந்து டெல்லி கலவரம் குறித்து விவாதிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினார்கள்.
இதனால் இரண்டு அவைகளும் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே கடும் அமளியின்போது எதிர்க்கட்சியினர் சபாநாயகர் இருக்கை அமைந்திருக்கும் முன்பகுதிக்குச் சென்றனர். அப்போது அவைக்குள் தான் தாக்கப்பட்டதாக கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கேரள காங்கிரஸ் எம்.பி ரம்யா ஹரிதாஸ் எழுதியுள்ள கடித்தத்தில், “இன்றைய தினம் நடைபெற்ற சபை நடவடிக்கையின் போது பிற்பகல் 3 மணியளவில் சபைக்குள்ளேயே பா.ஜ.க பெண் எம்.பி ஜாஸ்கவுர் மீனா என்னைத் தாக்கினார். நான் தலித், அதுமட்டுமல்லாமல் பெண் என்பதால் தாக்கப்பட்டேன்.
நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி-யை நடத்தும் முறை இதுதானா? இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர் அதில் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் சக பெண் எம்.பிக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக எம்.பி. ஜோதிமணி மற்றும் எம்.பி ரம்யா ஹரிதாஸ் இருவரையும் வலுக்கட்டாயமாகப் பிடித்து அவைக் காவலர்கள் வெளியே தள்ளியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!