India
“மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாய்களாகப் பிறப்பார்கள்” - சாமியாரின் அருவருக்கத்தக்க பேச்சு!
குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது ஸ்ரீ சகஜானந்த் மகளிர் கல்வி நிறுவனம். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவில், உணவகம் போன்ற பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அங்கு விடுதியில் தங்கியிருக்கும் பெண்களில் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் யார் என்பதை அறிய அங்கு தங்கியிருந்த 68 பெண்களின் உள்ளாடைகள் நீக்கப்பட்டு அப்பெண்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தக் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, இதுதொடர்பாக மாணவியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, கல்லூரி முதல்வர் உள்ளிட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீ சுவாமி நாராணன் கோவிலைச் சேர்ந்த சுவாமி க்ருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி என்பவர் மாதவிடாய் குறித்து அருவருக்கத்தக்க வகையில் எப்போதோ சொற்பொழிவாற்றிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில், “மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைத்த உணவை உண்டால் ஆண்கள் அடுத்த பிறவியில் காளை மாடுகளாகப் பிறப்பார்கள். மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவு சமைத்தால் பெண்கள் நிச்சயம் அடுத்த பிறவியில் பெண் நாய்களாகத்தான் பிறப்பார்கள்.
மாதவிடாய் நாட்கள் என்பது தவமிருப்பது போன்றது என்பதைப் பெண்கள் உணரமாட்டார்கள். இவையனைத்தும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.” எனப் பேசியுள்ளார் அவர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!