India
இனி ஆன்லைனிலும் வாக்களிக்கலாம் : சென்னை ஐஐடியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் ஆய்வு!
வெளியூரில் இருந்தாலும், ஆன்லைன் மூலம் வாக்களிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க சென்னை ஐஐடியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தாங்கள் பணி செய்யும் இடங்களில் இருந்தே வாக்குகளை பதிவு செய்யும் வகையில் மின்னணு தபால் மூலம் வாக்களிக்கும் முறை கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் 62 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் வெளியூரில் பணிபுரியும் வாக்காளர்கள் தங்களது சொந்த தொகுதிகளுக்கோ, வாக்குச்சாவடிகளுக்கோ செல்லாமல் வாக்குகளை பதிவு செய்ய புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் படி முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தங்கள் பகுதியில் உள்ள தேர்தல் ஆணைய இ-சேவை மையங்களுக்கு சென்று இணைய முகவரி மற்றும் கைரேகையை முறையாக பதிவு செய்த பின் ஆன்லைன் மூலம் வாக்களிக்கலாம்.
மின்னணு வாக்குச்சீட்டில் பதிவாகும் வாக்குகள் ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம் பெறும். ஆய்வுகள் முடிந்து அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு உரிய விதிகள் மூலம் இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’