India
“கோட்சேவுக்கும், மோடிக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்” - கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு பேரணியை மேற்கொண்டார்.
அப்போது பொதுக்கூட்டத்தின் போது மக்கள் முன்னிலையில் பேசிய அவர், தாங்கள் இந்தியர்கள்தான் என நாட்டு மக்களை நிரூபிக்கவேண்டிய பரிதாப நிலைக்கு மோடி அரசு தள்ளியுள்ளது.
நாம் எதையும், யாருக்கும் நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்தியர்கள்தான் என்பதை முடிவு செய்ய மோடி யார்? என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திவிட முடியாது என்றார்.
மேலும் பேசிய அவர், “இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த மனிதர் மகாத்மா காந்தி நம்மைவிட்டுச் சென்ற நாள் இன்று. வெறுப்பு அரசியலால் வளர்ந்த ஒருவரால் மகாத்மா காந்தி இந்த தேசத்தை விட்டுப் பிரிக்கப்பட்டார்.
அதுமட்டுமின்றி, காந்தியைக் கொல்வதற்கு கோட்சே பலமுறை முயற்சிகளை எடுத்துள்ளார். இறுதியில் கோட்சே வெற்றிபெற்றார். காந்தியை கோட்சே அதிகம் வெறுத்தார். அதற்கு காரணம் காந்திஜி உண்மையைத் தேடிக்கொண்டிருந்தார்.
பிரதமர் மோடியும், நாதுராம் கோட்சேவும் ஒரே மாதிரியானவர்கள். இருவருமே ஒரே சித்தாந்தத்தை கொண்டுள்ளவர்கள். ஆனால் மோடி, கோட்சே மீது நம்பிக்கை இருப்பதாக வெளிப்படையாக அறிவிக்கத் தைரியமற்றவர்.
இதில் மற்றொரு உண்மை என்னவெனில், கோட்சே யாரையும் நேசிக்கவில்லை, அவர் யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை, அவர் யாரையும் நம்பவில்லை. அதே மாதிரியானவர் தான் நம் பிரதமரும். ஆனால், நம் பிரதமர் தன்னை மட்டுமே நேசிக்கிறார், தன்னை மட்டுமே நம்புகிறார்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!