India
உமர் அப்துல்லாவுக்கு ஷேவிங் ரேசர் அனுப்பி வாங்கிக்கட்டிக் கொண்ட தமிழக பா.ஜ.க!
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகளை ரத்து செய்ததோடு அம்மாநில மக்களையும், முன்னாள் முதலமைச்சர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் வீட்டுக்காவலில் வைத்திருந்தது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு.
கடந்த 6 மாதங்களாக வீட்டுக்காவலில் இருக்கும் நிலையில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரான உமர் அப்துல்லாவின் புகைப்படம் ஒன்று அண்மையில் இணையத்தில் வைரலானது. அதில், அவர் நீண்ட வெள்ளைத் தாடியுடன் இருந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வருத்தம் தெரிவித்ததோடு பா.ஜ.கவின் அராஜக போக்கு குறித்து கண்டனமும் தெரிவித்தனர்.
இந்நிலையில், குடியரசு தினத்தன்று, நாட்டு மக்களை பிரிக்கும் எண்ணத்தில் செயல்படும் மத்திய பா.ஜ.க அரசை விமர்சிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சார்பில் இந்திய அரசியலமைப்பு குறித்த புத்தகம் அமேசானில் ஆர்டர் செய்து பரிசாக அனுப்பப்பட்டது. இது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
Also Read: “நாட்டை பிரிக்கும் போதெல்லாம் இதனை படியுங்கள்” : மோடிக்கு காங்கிரஸ் கொடுத்த சிறப்பான பரிசு!
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பா.ஜ.க., உமர் அப்துல்லாவுக்கு முகச்சவரம் செய்யப் பயன்படுத்தும் சாதனத்தை அமேசானில் ஆர்டர் செய்து அவரது இல்லத்துக்கு அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பா.ஜ.க, “இந்த நிலைமையில் உங்களை இப்படிப் பார்க்க வருத்தமாக உள்ளது. ஆகவே இதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால் காங்கிரஸை அணுகுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்கு தேசிய அளவில் பெரும் கண்டனங்களும், எதிர்ப்பும் எழுந்ததை அடுத்து அந்த ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளது தமிழக பா.ஜ.க.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?