India
‘பனிப்பாறைகள் உருகுவதால் வைரஸ் கிருமிகள் புதிதாக வெளிவரும்’ : கரோனா குறித்து எச்சரிக்கும் சூழலியலாளர்!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,800-க்கும் மேலானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாகபூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் சுந்தர்ராஜன் வெளியிட்டிருக்கும் பதில், “சீனாவில், 4 கோடி மக்கள் வாழும் 13 நகரங்களை கொண்ட "வுகான்" மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான சேவை என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு மாகாணம் முழுவதையும் சிறைவைத்தது போல் உள்ளதாக அந்த பகுதியில் வாழக்கூடிய மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார், 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியை முழுவதுமாக வெளியுலகில் இருந்து தனிமைப்படுத்தி அறிவித்துள்ளது சீன அரசு. 1,000 படுக்கைகளை கொண்ட புதிய மருத்துவமனையை 6நாட்களில் கட்டிமுடிக்க பணிகளை முடுக்கிவிட்டுள்ளது அந்த அரசு.
காலநிலை மாற்றம் மனிதர்களுக்கான சுகாதாரம் சார்ந்து கடந்த 70 ஆண்டுகளாக நாம் பெற்ற முன்னேற்றத்தை முன்நகர்வுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று கடந்த மாதம் லான்செட் ஆய்வு அறிக்கை தெளிவாக்கியது.
மேலும் புதுப்புது வைரஸ் கிருமிகள் மனித குலத்தை தாக்குமென்றும், அதனை கட்டுப்படுத்த வழிவகை இல்லாமல் போகும் என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தது அந்த ஆய்வு.
பனிப்பாறைகள் உருக உருக இதுகாலமும் வெளியேவராமல் இருந்த வைரஸ் கிருமிகள் புதிதாக வெளிவருமென்றும் தெரிவித்திருந்தது ஆய்வு. ஏந்திகள்வழி பரவும் நோய்கள் (vector borne diseases) அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது” என ஒரு எச்சரிக்கை செய்தியை தெரிவித்துள்ளார்.
Also Read
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?
-
வெளியான வாக்காளர் இறுதிப்பட்டியல்... உங்கள் பெயர் உள்ளதா? - முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்!
-
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி: இந்திய அணியில் மாற்றம் நிகழுமா? அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
-
“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!