India
’இந்தியா 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைவது கடினம்’ : உண்மையை ஒப்புக்கொண்ட பா.ஜ.க அமைச்சர் நிதின் கட்கரி
இந்தியாவின் பொருளாதாரத்தை 2025ம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மோடி அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தின் போது அறிவித்தது. ஆனால் இந்த திட்டத்துக்கு கொஞ்சமும் இடமளிக்காத நிலையிலேயே தற்போதைய பொருளாதாரம் இருக்கிறது.
பொருளாதார மந்த நிலையை சீரமைக்க எந்த வித ஆக்கப்பூர்வமான திட்டங்களையும், வியூகங்களையும் வகுக்காமல் மனம் போன போக்கில் 2025க்குள் 5 ட்ரில்லியன் டாலராக இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவோம் என பா.ஜ.க அமைச்சர்கள் அவ்வப்போது பேசி வருவது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவது கடினமான செயல் என கூறியுள்ளார்.
இறக்குமதியை குறைத்துவிட்டு உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தினால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும் என்றும், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மூலம் இந்தியாவின் ஏற்றுமதியை உயர்த்தினால் மட்டுமே இலக்கை அடைய முடியும் என்றும் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
ஆனால், தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலையால் 5 ட்ரில்லியன் டாலர் இலக்கை அடைவது கடினமான ஒன்று. இந்தியாவில் உள்ள வளங்களை பயன்படுத்துவதே இதற்கெல்லாம் ஒரே தீர்வாக அமையும் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பா.ஜ.க அமைச்சர்கள் பலர் இந்தியாவில் பொருளாதார மந்தநிலையே ஏற்படவில்லை என கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடந்து முடிந்த நடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ஆர்.எஸ்.எஸின் செல்லப்பிள்ளையாக இருக்கும் நிதின் கட்கரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பேசப்பட்டது.
ஆனால், பா.ஜ.க மீண்டும் மோடியையே பிரதமராக தேர்வு செய்தது. ஆகையால் நிதின் கட்கரிக்கு மீண்டும் கேபினெட் அமைச்சர் பதவியே கிட்டியது. இதனால் அதிருப்தியில் இருந்த கட்கரி, பா.ஜ.கவின் 5 ட்ரில்லியன் டாலர் இலக்கு செல்லுபடியாகாது என கூறியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!