India

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் : 2020ல் சிக்கலான நிலையில் இந்தியா !

இந்திய நாட்டின் பொருளாதார நிலை, வரலாற்றில் இதுவரை அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் மத்திய பா.ஜ.க அரசோ, நாட்டில் பொருளாதார சரிவே ஏற்படவில்லை. 2020-ல் பெரும் வேலை வாய்ப்பு உருவாகும் என உண்மையை மறைத்து பொய் பிரசாரங்களை மக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் 2020-ம் ஆண்டில் புதிய வேலை வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று இந்தியப் பணியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையில், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு இல்லை என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, இந்தியப் பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தி, “2020-ல் முதலீடுகளும், நுகர்வும் அதிகரித்தால் மட்டுமே வேலை வாய்ப்பு சற்று உயர வாய்ப்பு உள்ளது. ஆனால் இதே நிலைமை நீடித்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக சாத்தியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போதைய பொருளாதார நிலையால் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதேப்போல், ஆட்டோமொபையல் துறையில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அதேபோல் ஐடி நிறுவனங்கள் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளன. தற்போதைய நிலையில், நிறுவனங்கள் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே இருக்கும் ஊழியர்களின் திறனை உயர்த்தும் முயற்சியில் இறங்க இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “4 ஆண்டுகளில் வெறும் 3.3% தான்” - வேலை உருவாக்கத்தில் தோல்வி கண்ட மோடி அரசு” : ஆய்வு நிறுவனம் தகவல்!