India
#LIVE | கர்நாடகா : 15 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் : சித்தராமையா ராஜினாமா!
இடைத்தேர்தல் தோல்வி: சித்தராமையா ராஜினாமா!
கர்நாடகாவில் இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் வெற்றி
1. ஹன்சூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத் வெற்றி
2. சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அர்ஷத் ரிஷ்வான் வெற்றி
கர்நாடகா இடைதேர்தலில் பா.ஜ.க 8 தொகுதிகளில் வெற்றி
1. காக்வாட் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீமந்த் பாடில் வெற்றி
2. சிக்கபெல்லாபூர் பா.ஜ.க வேட்பாளர் சுதாகர் வெற்றி
3. கே.ஆர்.பேட்ட பா.ஜ.க வேட்பாளர் கே.சி.நாராயண கவுடா வெற்றி
4. எல்லப்பூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஷிவ்ராம் ஹெப்பர் வெற்றி
5. கோகாக் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் ஜார்கிஹோளி வெற்றி
6. ஹெரிகுருர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பி.சி.பாடில் வெற்றி
7. விஜயநகர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஆனந்த்சிங் வெற்றி
8. ரானிபென்னூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அருண்குமார் வெற்றி
15 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை:
பா.ஜ.க - 10
காங்கிரஸ் - 2
ம.ஜ.த - 2
மற்றவை - 1
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 6 இடங்களில் பா.ஜ.க முன்னிலை!
கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அதில், 6 இடங்களில் பா.ஜ.க-வும், 1 தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் முன்னிலையில் உள்ளது.
6 இடங்களில் பா.ஜ.க முன்னிலை
காலை 8 மணிக்கு தொடங்கிய இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை!
15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலத்தின் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்படுகின்றன. மேலும் 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் நண்பகல் 12 மணிக்குள் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
15 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை தக்கவைக்க முடியும் என்பதால், கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!