India
“தனி நாடு, தனி சின்னம், தனி பாஸ்போர்ட்” - தேடப்படும் குற்றவாளி நித்தியானந்தாவின் ‘பகீர்’ திட்டம்!
சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, ‘கைலாசா’ என்கிற தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நித்தியானந்தாவுக்கு இந்தியாவில் மட்டும் தற்போது 300 ஆசிரமங்கள் இருக்கின்றன. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான ஆசிரமங்கள் உள்ளன. உலகம் முழுவதும் நித்தியானந்தாவின் சீடர்கள், அவரது ஆசிரமங்களில் பணிவிடை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி 'கைலாசா' என்ற நாட்டை உருவாக்குவதாகவும், அதை எல்லைகள் அற்ற இந்து நாடாக அமைக்க நித்தியானந்தா முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக 'கைலாசா' என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தைப் பின்பற்றும் அனைவரும் ‘கைலாசா’ நாட்டின் குடிமக்கள் ஆகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, இந்த நாட்டிற்குச் செல்ல தனி பாஸ்போர்ட், கொடி ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டின் பிரதமராக நித்தியானந்தா இருப்பார் எனவும் அவரின் கீழ் 10 துறைகள் இருக்கும் எனவும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் நித்தியானந்தா மீது ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்கள் என பல்வேறு குற்றங்கள் தொடர்பான அடுக்கடுக்கான வழக்குகள் இருக்கின்றன. இளம்பெண்களையும், சிறுமிகளையும் ஏமாற்றி சீடர்களாகச் சேர்த்துக்கொள்வதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நித்தியானந்தா, இணையதளம் மூலம் பிரசங்கங்களையும் நிகழ்த்தி வருகிறார். இந்நிலையில், தனி நாட்டையே உருவாக்கி இருப்பதாகக் கூறியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!