India
“யாருடனாவது ஓடி போயிருப்பா” : மருத்துவர் பிரியங்காவின் தாய் அளித்த புகாருக்கு போலிஸ் தந்த அலட்சிய பதில்!
ஐதராபாத்தின் சம்ஷாபாத் நரசய்ய பள்ளியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா நேற்று முன் தினம் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலப்பட்டார்.
இந்த சம்பவம் தந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், மருத்துவர் பிரியங்கா எரித்துக் கொல்லப்பட்டுக்கிடத்த இடத்தின் அருகில் மற்றொரு பெண்ணின் உடலும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐதராபாத்தின் முக்கிய நகரில் அடுத்ததடுத்து இரண்டு பெண்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கண்டன குரல் வழுப்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கால்நடை மருத்துவர் பிரியங்காவின் தாய் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின் போது அவர் தெரிவித்திருப்பதாவது, “என் மகள் காணமல் போன அன்று இறவு எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மாத்திரை பற்றிக் கேட்டால்.
வீட்டிற்கு விரைவில் வந்துவிடுவேன். பயப்படாதே எனக் கூறிவிட்டு போன் கட் செய்தார். அதன் பிறகு சிறிது நேரத்தில் எனது இளைய மகள் பவ்யா போன் செய்து அக்கா வந்துவிட்டாலா என கேட்டாள்.
இல்லை என்றதும், ’அவள் வண்டி பஞ்சராகிவிட்டாதாம், பயந்தபடி என்னிடம் போனில் பேசினார்’ என்றாள். அதன்பிறகு எனக்கு பதற்றம் அதிகமாகிவிட்டது. பவ்யாவும் அவரது நண்பரும் எனது மகளை தேடச் சென்றனர். இரவு 11 மணி வரை தேடிவிட்டு எங்கும் கிடைக்கதால் வீடு திரும்பினார்கள்.
அந்த சமயத்தில் பிரியங்கா போனும் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் நாங்கள் ஷம்ஷாபாத் விமானநிலையத்துக்கு அருகில் உள்ள காவல்நிலையத்துக்குச் சென்றோம். ஆனால் அங்கிருந்த போலிஸார் பெண் காணமால் போன பகுதி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வராது எனக் கூறி எங்களது புகாரை ஏற்க மறுத்தனர்.
பின்னர் டோல்பிளாசா அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று மகள் காணமால் போனதாக புகார் அளித்தோம். அங்கு இருந்த போலிஸார் எங்களை மோசமாக நடத்தினார்கள். புகாரை வங்கிக்கொண்டு எங்கள் மகள் யாரையாவது காதலிக்கிறாளா? மறைக்காமல் சொல்லுங்கள் என்று கேட்டனர்.
’உங்கள் மகள் பார்கிங்கில் இருந்து வெளியில் வரும் சி.சி.டி.வி காட்சிகள் தான் இருக்கிறது. யாருடனாவது ஓடி போயிருப்பால்’ என்று சொன்னார்கள். எங்கள் மகள் அதுபோல செய்யமாட்டாள் எனக் கூறிவிட்டு பதபதைப்புடனும் மன வேதனையுடனும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குவந்தோம். அந்த புகாரின் கீழ் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்.
மகளுக்கு விபத்து ஏற்பட்டிருக்குமோ என அஞ்சியபடியே வீடு திரும்பினோம். பின்னர் 3.30 மணியளிவில் எனது மகளின் நகைகளை போலிஸார் காண்பித்தனர். எனது மகள் பாலத்தின் கீழ் கருகிய நிலையில் இருந்த பின்னரே விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.
இரவு 12 மணிக்கு புகார் அளிக்கும் போது போலிஸார் அலட்சியம் காட்டாமல் விசாரணையை செய்திருந்தால் எனது மகளை காப்பாற்றிருக்கலாம். போலிஸாரின் இந்த அலட்சியம் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
எனது மகளைக் கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கண்ணீர் மல்க தனது பேச்சை முடித்தார். இளம் பெண் காணவில்லை என்றால் போலிஸார் இது போல கேள்விகளால் பெண்ணின் குடும்பத்தினரை கஷ்டப்படுத்துவது கண்டனத்தை எழுப்பியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!