India
திருக்குறள் மீது போலி அக்கறை : நாடாளுமன்றத்தில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பா.ஜ.க !
நாடாளுமன்றத்தின் கேள்வி நேர விவாதத்தில், திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு ஏதாவது கோரிக்கைகள் வந்துள்ளதா? என்கிற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் “எந்த நூலையும் தேசிய நூலாக அறிவிக்கும் திட்டம் இல்லை” என்று தெரிவித்துள்ளது பா.ஜ.க.,வின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர், “திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க தமிழக அரசு அல்லது ஏதாவது தன்னார்வத் தொண்டு அமைப்புகளிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் ஏதேனும் வந்துள்ளதா? அப்படி வந்திருந்தால் , அதுகுறித்த விவரங்கள் மற்றும் அதன்மீது அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார். அதில், ''திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக்கோரி ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமாரிடமிருந்து மத்திய அரசுக்குக் கோரிக்கை வந்திருக்கிறது. தற்போதைய நிலையில், எந்த நூலையும் தேசிய நூலாக அறிவிக்கும் திட்டம் அரசிடம் இல்லை'' எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க.,வினர் திருவள்ளுவருக்குக் காவி அடித்து சொந்தம் கொண்டாடுகின்ற வேலையில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளது பா.ஜ.க.வினருக்கு திருவள்ளுவர் மீதோ, திருக்குறள் மீதோ உண்மையில் எந்த அக்கறையும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!