India
"பெண் எம்.பிக்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளிய அவைக்காவலர்கள்” - காங்கிரஸ் குற்றச்சாட்டு!
மகாராஷ்டிர அரசியலில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் திடீரென பதவியேற்றனர்.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா-தேசியவாத காங்.-காங்கிரஸ் கட்சிகள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீது 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில அரசியல் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது.
ஜனநாயகத்தைக் காப்போம், அரசியலமைப்புச் சட்டத்தை கொலை செய்யாதீர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
அப்போது அங்கிருந்த ஜோதிமணி எம்.பி., கேரளாவை சேர்ந்த எம்.பி ரம்யா ஹரிதாஸ் இருவரையும் வலுக்கட்டாயமாகப் பிடித்து அவைக் காவலர்கள் தள்ளினார்கள் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பின்னர் பெண் எம்.பிகளிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட விதம் குறித்து சோனியா காந்தி பெண் எம்.பி.களை சபாநாயகரிடம் அழைத்துச் சென்று புகார் அளித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறுகையில், " என்னையும், ரம்யா ஹரிதாஸையும் அவைக் காவலர்கள் பிடித்துத் தள்ளினார்கள். இதுகுறித்து அவைத் தலைவரிடம் புகார் செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!