India
"வருகைப் பதிவேட்டில் பெற்ற கையெழுத்தைக் காட்டி மோசடி செய்த அஜித் பவார்” - தேசியவாத காங். குற்றச்சாட்டு!
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க, சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தும், முதலமைச்சர் பதவி போட்டியால் ஆட்சியமைக்க முடியவில்லை. யாரும் ஆட்சியமைக்க முன்வராததால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முயன்றன. அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவுற்று இன்று அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்படும் நிலை இருந்தது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன், பா.ஜ.க-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக இன்று காலை பதவியேற்றுக்கொண்டார். அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவார், தேசியவாத காங்கிரஸுக்கும், மகாராஷ்டிர மக்களுக்கும் துரோகம் இழைத்து விட்டதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “இது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு, இதில் தேசியவாத காங்கிரஸூக்கு உடன்பாடில்லை. அஜித் பவாரின் இந்த முடிவை தேசியவாத காங். ஆதரிக்காது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் இதுகுறித்துப் பேசும்போது, “தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏக்களிடன் வருகைப்பதிவை உறுதி செய்வதற்காக கையெழுத்து பெறப்பட்டது.
அவற்றை தேசியவாத காங். எம்.எல்.ஏக்கள் ஆட்சியமைக்க ஒப்புதல் அளித்ததாக கடிதமாக எழுதி அஜித் பவார் மோசடி செய்துவிட்டார். ஆளுநரிடம் அந்த மோசடி கடிதத்தைக் காட்டி ஆட்சியமைத்து விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா தலைவர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது பேசிய சரத் பவார், “மகாராஷ்டிராவில் திட்டமிட்டபடி மூன்று கட்சி கூட்டணி ஆட்சி அமையும். பா.ஜ.க-வால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!