India
இந்திய ராணுவத்தில் பெண் போலிஸ் படை : கர்நாடக விவசாய தொழிலாளியின் மகள் தேர்வு!
இந்திய ராணுவத்தின் கீழ் பல பிரிவுகள் உள்ளன. அதில் இந்திய ராணுவ போலிஸ் படை இயங்கி வருகிறது. ஆனால், நூறாண்டுக்கும் மேலாக இயங்கிவரும் அந்த ராணுவ போலிஸ் படையில் பெண் ராணுவ போலிஸார் இதுவரை இருந்ததில்லை.
இந்நிலையில், இந்திய ராணுவத்தில் பெண்கள் போலிஸ் படை அமைக்க உத்தரவு கடந்தாண்டு வெளியானது. அதைத் தொடர்ந்து இந்திய ராணுவ பெண் போலிஸ் படைக்கு ஆள் சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
நாடு முழுவதும் இருந்து சுமார் 8.5 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, மருத்துவ பரிசோதனைகள் என முடிக்கப்பட்டு இறுதியாக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் மாநிலத்தின் ஹுப்பள்ளியில் தார்வார் மாவட்டத்தில் மடிகொப்பா என்ற கிராமத்தில் விவசாய கூலி தொழில் செய்துவரும் மகாதேவப்பா நீலவ்வா தம்பதியரின் மகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாமாண்டு படித்து வரும் பீமக்கா அந்தமாநிலத்தில் இருந்து ராணுவ பெண் போலிஸ் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணாக அறிவிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் 8 பெண்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் தேர்வான பெண்களின் பட்டியலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ போலிஸாக முதல்முறையாக பெண்களை நியமிக்க இந்திய ராணுவம் முடிவெடுத்திருப்பது ராணுவத்தில் நிலவும் பாலின பாகுபாட்டை ஒழிப்பதற்கான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
Also Read
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்
-
BB9: ''VJ பார்வதி கிட்ட பேசுறது செவுத்து கிட்ட பேசுற மாதிரி'' - கொந்தளிக்கும் காரக்குழம்பு கனி அக்கா!