India
அரபிக் கடலில் உருவானது ‘க்யார்’ புயல்... கனமழைக்கு வாய்ப்பிருக்கிறதா?
வடகிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ‘க்யார்’ புயலாக வலுப்பெற்றுள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அடுத்த ஐந்து நாட்களில் ஓமன் நோக்கி செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மும்பை மற்றும் கோவா மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து விட்டது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் பதிவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!