India
“மோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ஜியோ ஹிந்த்” : தேர்தல் பிரச்சாரத்தில் யெச்சூரி சாடல்!
மராட்டியம், அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பால்கர் மாவட்டத்தின் தஹானு தொகுதியில் சிபிஐ(எம்) வேட்பாளர் வினோத் நிகோலுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்த பிரச்சாரத்தில் பேசிய யெச்சூரி, “நாட்டையும் அதன் குடிமக்களையும் காப்பாற்ற பா.ஜ.க மற்றும் சிவசேனா தோற்கடிக்கப்பட வேண்டும். பா.ஜ.க தலைமையிலான அரசின் பொருளாதார சரிவு, அரக்கமயமாக்கலால் நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை” எதிர்கொண்டு வருகிறது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு உதவுவதற்காக அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் “ஜெய் ஹிந்த்” முழக்கத்திற்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடியின் புதிய முழக்கம் “ஜியோ ஹிந்த்” ஆகிவிட்டது” என யெச்சூரி சாடியுள்ளார்.
Also Read
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!