India
கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் வாழ்நாள் சிறை : வருகிறது ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த மசோதா
ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. அதில், சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்துவது, நிகழ்ச்சி கொண்டாட்டங்களின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது, திட்டமிட்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு தண்டனைகளை அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதங்கள் தயாரிப்பவர்களையும் புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் கண்காணிக்க முடியும். சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உள்நாட்டில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விற்பனை செய்வோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை உள்ளது. தற்போது இந்த தண்டனை காலத்தை 14 ஆண்டுகளாக உயர்த்த புதிய சட்டத்திருத்தம் வகை செய்கிறது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!