India
76000 கோடி ரூபாய் வாராக்கடனை தள்ளுபடி செய்தது SBI- 100 கோடிக்கு மேல் வாங்கிய 980 பேரின் கடன்கள் தள்ளுபடி!
எஸ்பிஐ வங்கியில் வசூலாகாமல் இருந்த வாராக்கடனான 76 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்திருப்பதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் முக்கிய வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்குப் பறக்கும் தொழிலதிபர்களைப் பற்றி நாம் அறிகிறோம். அதே நேரத்தில் முக்கிய வங்கிகள் கொடுத்த பல்லாயிரக்கணக்கான கோடி கடனை வாராக்கடனாக அறிவித்து அதனை தள்ளுபடி செய்து வரும் புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தாண்டு மார்ச் 31 வரை அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கி வாராக்கடனாக ரூபாய் 76,000 கோடியை தள்ளுபடி செய்து இருப்பதாக ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
980 பேர் 100 கோடிக்கு மேல் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று அவற்றைக் கட்டத் தவறியதால், வாராக்கடனாக அறிவித்து வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பதாக ரிசர்வ் வங்கி பட்டியலிட்டு இருக்கிறது.
980 கணக்குகளில் 220 வங்கி கணக்குகள் பாரத ஸ்டேட் வங்கிக் கணக்குகளாகும். 500 கோடிக்குமேல் கடன் பெற்ற 71 வங்கி கணக்குகளின் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.
எஸ்பிஐ வங்கியில் 33 பேர் பெற்ற 500 கோடிக்கு அதிகமான வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி, 100 கோடிக்கு மேல் பெற்ற 94 பேரின் கடன்களையும், 500 கோடிக்கு மேல் வாங்கிய 12 பேரின் வாராக்கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளது.
இதேபோல ஐடிபிஐ வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் கோடிக் காணக்கில் வாராக்கடனை தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஜீவா பாரதி
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!