India
சசிகலா தங்கியிருக்கும் சிறை அறையில் அதிரடி சோதனை... சிறையில் ஏராளமான கஞ்சா, மதுபாட்டில்கள் பறிமுதல்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹார பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தச் சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்பட 2,200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு தனியாகவும், ஆண்களுக்கு தனியாகவும் சிறை வளாகம் உள்ளது.
இந்தச் சிறையில் உள்ள கைதிகளுக்கு தாராளமாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாகவும், வெளியில் உள்ளவர்களோடு பேச செல்போன்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் பெங்களூரு மாநகர போலிஸாருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலிஸார் இன்று அதிகாலை 5 மணி முதல் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று கைதிகளின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், நூற்றுக்கணக்கான சிம்கார்டுகள், மதுபாட்டில்கள், கத்தி போன்ற ஆயுதங்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து ஒவ்வொரு அறையாக போலிஸார் சோதனை மேற்கொண்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்கியிருக்கும் அறைகளிலும் சோதனை நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சசிகலா சிறையில் சகல வசதிகளையும் அனுபவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போதைய சோதனையின் மூலம் அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
4 மணி நேரம் - 10 துறைகள் குறித்து ஆய்வு : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியது என்ன?
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான 4 அறிக்கைகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய மாநில திட்டக்குழு!
-
”இருட்டில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
-
“தமிழ்நாடு அங்கன்வாடி குறித்து பரப்பப்படும் தவறான தகவல்!” : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
-
ரூ.36.62 கோடி செலவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!