India

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்து பிரதமருக்கு 71 முன்னாள் செயலாளர்கள் கடிதம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய நீதிமன்றக் காவல் வருகிற 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒப்புதல் மட்டுமே அளித்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு மட்டும் ஏன் தண்டனை என்றும், ஐஎன்எக்ஸ் முதலீடு தொடர்பாக சரிபார்த்து அளித்த ஐஏஎஸ் அதிகாரிகளான செயலாளர்களிடம் விசாரிக்காதது ஏன் என மத்திய அரசுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டிருந்தார்.

இதே கேள்வியை ப.சிதம்பரமும் அண்மையில் ட்விட்டர் வாயிலாக கேட்டிருந்தார்.

இதனையடுத்து ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அந்நிய முதலீட்டு வாரிய உறுப்பினராக இருந்த சிந்துஸ்ரீ குல்லர் உள்ளிட்ட 6 அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவெடுத்திருந்தது.

இந்த நிலையில், முன்னாள் செயலாளர்களை சிபிஐ விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 71 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன், முன்னாள் அமைச்சரவை செயலாளர் கே.எம். சந்திரசேகர் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.