India
“பா.ஜ.க ஆட்சியில் 55% விற்பனை சரிவு” : மாருதி சுசுகியை தொடர்ந்து திவாலாகும் அசோக் லேலண்ட்! - #ShockReport
பா.ஜ.க ஆட்சியில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.
குறிப்பாக, மாருதி சுசுகி நிறுவனம் செப்டம்பர் 2019-ம் ஆண்டு வரையிலான கார் விற்பனை விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 26 சதவிகித அளவிற்கு சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் வணிக சந்தையில் லாரி போன்ற வாகனங்களைத் தயாரிப்பத்தில் முன்னோடி நிறுவனமான செயல்படும் அசோக் லேலண்டு விற்பனையில் நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது.
மாருதி சுசுகியைத் தொடர்ந்து, அசோக் லேலண்டு நிறுவனமும் செப்டம்பர் 2019-ம் ஆண்டு வரையிலான விற்பனை விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த செப்டம்பர் 2018-ம் ஆண்டு 19 ஆயிரத்து 374 வாகனங்களை விற்றுள்ளது. ஆனால் 2019-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலும் வெறும் 8 ஆயிரத்து 780 வாகனங்களை மற்றுமே விற்றுள்ளது. இது சுமார் 55 சதவிகித அளவுக்கு சரிவு என குறிப்பிட்டுள்ளது.
அதேப்போல், மீடியம் மற்றும் கண ரக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 67 சதவிகிதமும், லட் கமர்ஷியல் வாகனங்களின் உள்நாட்டு விற்பனையும் 21 சதவிகிதமும் சரிவை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மாருது சுசுகியால் தன்னுடைய 26 சதவிகித சரிவையே சமாளிக்க முடியாமல் இருக்கும்போது, அசோக் லேலண்ட் நிறுவன 55 சதவிகித சரிவை எப்படி சமாளிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், மோடி அரசினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிய இருந்த முக்கிய நிறுவனங்கள் இன்று தங்களின் கடைகளை காலி செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய போக்கை தடுக்க அரசு போதியமுயற்சி எடுத்திருக்க வேண்டும், ஆனால் தவறிவிட்டது என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!