India

“Lifestyle மாற்றத்தால் இந்திய இளைஞர்கள் 30 வயதிலேயே இறக்கின்றனர்” : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக நாடுகளில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இளைஞர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஹெல்தியன்ஸ் என்ற இந்தியாவின் புகழ் பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்க்கொண்டது.

அந்த ஆய்வில், இந்தியாவில் தவறான வாழ்க்கை முறை பழக்கங்களினால் 30 முதல் 44 வயது உடைய பெரும்பாலனோர் இறப்பை சந்திக்கின்றனர் என்றும், குறிப்பாக, உடலில் கொழுப்பு சேர்த்தல், உடல் பருமன் மற்றும் இதய நோய் போன்ற லைஃப் ஸ்டைல் தொடர்புடைய நோய்களால் இறப்பதாகவும் கூறுகின்றனர்.

அதேபோல், 50 முதல் 59 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இதுபோன்ற நோய்களை அவர்களும் சந்திப்பதாக கூறுகின்றனர். தற்போது 4 லட்சம் நோயாளிகளில் 2.25 லட்சம் பேர் ஆண்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் என்றும், அதில் 1.75 சதவீதமான பெண்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த சிக்கல் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தை உண்டாக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலும், உலக சுகாதாரத்துறை அமைச்சகத்தில் தகவல் படி, உலகம் முழுவதும் 60 சதவீதம் இறப்பு நடைபெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 44 சதவீதமானவர்கள் இளம் வயதுள்ள இளைஞர்கள் என்றும் குறிப்பிட்டுகிறது. அந்த இறப்புகளுக்கு பெரும்பான்மையான காரணம் இந்த தவறான வாழ்க்கை முறை பழக்கங்களே என்றும் நிரூபணமாகியுள்ளது.