India
புதுவை காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு : திட்டமிட்டு கொலை செய்த பா.ஜ.க தலைவர் அதிரடியாக கைது!
புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். காங்கிரஸ் பிரமுகரான இவர் கடந்த 23ம் தேதி தனது மனைவியுடன் சென்றபோது ரவுடி கும்பல் ஒன்று சந்திரசேகர் மீது வெடிகுண்டு வீசியும், கொடூரமாக வெட்டியும் கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். சுகன், ரங்கராஜ், அப்துல் நசீம் ஆகிய மூன்று பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து சுகன் மற்றும் அவனது கூட்டாளிகளை காலாப்பட்டு போலிஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சோழன் என்பவர் கொலை செய்யக் கூறியதாகவும் அதற்காக பணம் தருவதாகத் தெரிவித்தாகவும் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சோழனை தனிப்படை போலிஸார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவனது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சோழன், புதுச்சேரி மாநில பா.ஜ.க வர்த்தக அணி தலைவர் ஆவார்.
மேலும் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் சோழன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!