India
54 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தொகுதியை கைபற்றிய இடதுசாரி கூட்டணி : போட்டியிட்ட பா.ஜ.க படுதோல்வி!
கேரளாவில் பாலா சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1965-ம் ஆண்டு துவங்கி 54 ஆண்டுகளாக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் கே.எம்.மானி. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவுக் காரணமாக உயிழந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பின்னர் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் மானியுடன் அரசியலில் நெருக்கமாக பணியாற்றிய ஜோஸ் டாம் புலிக்குன்னில் போட்டியிட்டார். இடதுசாரி கூட்டணி சார்பில் மானி சி கப்பன், பா.ஜ.க சார்பில் ஹரி ஆகியோர் உட்பட 13 பேர் பாலா தொகுதியில் போட்டியிட்டனர். கடந்த 23-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை, 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இடதுசாரி கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்தார்.
அதன் முடிவில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் மானி சி கப்பன் 54,137 வாக்கு பெற்று முதல் இடத்திலும், காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் புலிக்குன்னில் 51,194 வாக்குகள் பெற்றார்.
இதன் மூலம். 2 ஆயிரத்து 943 வாக்குகள் வித்தியாசத்தில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றார். இதில் போட்டியிட்ட பா.ஜ.க வெறும் 18,044 வாக்குகள் மட்டுமே பெற்றது. மானி இறப்புக்குப் பிறகு பாலா தொகுதியையும் இழ்ந்துள்ளது காங்கிரஸ்.
மேலும் இந்த தொகுதியில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!