India
அரை நூற்றாண்டுகாலமாக ஒரே எம்எல்ஏ.. புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்கவிருக்கும் மக்கள்: எந்த தொகுதி தெரியுமா?
1965ம் ஆண்டு துவங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் உள்ள ‘பாலா’ எனும் தொகுதிக்கு நிரந்தர எம்.எல்.ஏ-வாக இருந்த மானி கடந்த ஏப்ரல் மாதம் காலமானதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
அரை நூற்றாண்டு காலமாக ஒரே எம்.எல்.ஏ-வையே கண்டிருந்த பாலா தொகுதி மக்கள் புதிய சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்.
காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்து, அக்கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கேரள காங்கிரஸ் (எம்) பிரிவு கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்தவர் கே.எம்.மானி.
கே.எம்.மானி 1965ம் ஆண்டு துவங்கி கோட்டயம் மாவட்டத்தின் பாலா எனும் ஒரே தொகுதியில் இருந்து 13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளார்.
கேரளாவின் முன்னாள் நிதி அமைச்சரான இவர், கேரள சட்டமன்றத்தில் 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். உலகிலேயே முதன்முறையாக விவசாயிகள் மற்றும் விதவைகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் இவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில்தான் கேரள அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கேரளாவில் அதிக ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்கிற பெருமையும் கே.எம்.மானிக்கு உண்டு. இத்தகு பெருமைகள் கொண்ட கே.எம்.மானி கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தனது 86 வயதில் சுவாசக் கோளாறு நோயால் காலமானார்.
இந்நிலையில் அவரது தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாலா தொகுதி மக்கள் அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு புதிய எம்.எல்.ஏ.,வை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !