India
வாகனங்களில் சாதி - மத அடையாளங்கள் இருந்தால் அபராதம் : போக்குவரத்து போலிஸார் அதிரடி!
புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும், பழைய சட்டத்தில் சில முக்கிய திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கான திருத்த மசோதா, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், லைசென்ஸ் காலாவதியாகிவிட்டால் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை ஒரு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளை மீறும் நபருக்கு அபராதக் கட்டணம் முன்பு இருந்ததைவிட பன்மடங்கு அபராதம் விதிப்பது போன்றவை புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில போக்குவரத்துத் துறையினர் வாகனங்களில் மத, சாதிய குறியீடுகள் உள்ள வகையில் ஸ்டிக்கர் இருந்தால் அந்த வாகனத்திற்கும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வாகனங்களில் சாதி, மதம், அரசியல் சார்ந்த அடையாளங்களை ஸ்டிக்கர்களாக ஒட்டிக்கொள்ளும் நடைமுறை மக்கள் மத்தியில் உள்ளது. சிலர் அந்த அடையாளங்களைப் பயன்படுத்தி விதிமீறலில் ஈடுபடுவதால் அவற்றை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைப்போன்ற அடையாளங்கள் கொண்ட நம்பர் ப்ளேட் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். மேலும் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமாக வாசகம் எழுதியிருந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் பெயர், பதவி, படிப்பு போன்ற ஸ்டிக்கர் அல்லது எழுத்துகளுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்றும் காவல்துறை விளக்கியுள்ளது. ஸ்டிக்கர் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான முக்கியக் காரணமே அவை வாகன ஓட்டியின் பாதுகாப்பைக் கேள்விக்குறி ஆக்குவதுதான் என்றும் கூறப்படுகிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!