India
நிலாவில் ஆட்டோ ? - பெங்களூருவில் தரையிறங்கிய விண்வெளி வீரர்: வைரல் வீடியோவின் பின்னணி !
பெங்களூருவின் யஷ்வந்த்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஹீரோஹலி, துங்கநகர், விஷ்வனீதம் போன்ற பல பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும், மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்துள்ள இந்தச் சாலையை எந்த அரசு அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்யவும் இல்லை, அதனைச் சீரமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சேதமடைந்துள்ள சாலையை சீர் செய்யக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த 3D ஓவியர் பாதல் நஞ்சுண்டசுவாமி என்பவர் விண்வெளி வீரர் உடை அணிந்து வந்து சாலையில் நடந்து செல்வது போல வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அரசின் கவனத்தை ஈர்க்கும் கையில் நிலாவில் விண்வெளி வீரர் நடப்பது போன்று அடிமேல் அடி வைத்து குண்டும் குழியுமாக உள்ள இடத்தில் நடந்து சென்றுள்ளார். ஓவியரின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்களும் வரவேற்பும் ஆதரவும் அளித்துள்ளனர்.
பாதல் நஞ்சுண்டசுவாமி பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்னைகளை தனது ஓவியத்தின் மூலம் வெளிபடுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மேலும், சாலையில் விண்வெளி வீரர் உடையில் நடந்து சென்ற வீடியோ பாதல் நஞ்சுண்டசுவாமி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ பலரால் பகிரப்பட்டும், அவரது முயற்சிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணியில் இருந்த 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் யஷ்வந்த்பூர் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!