India
மீனவர்களை அச்சுறுத்த புதிய சட்டத்திருத்தம்... மாநில அரசின் உரிமையைப் பறிக்க பா.ஜ.க அரசு திட்டம்!
ஆழ்கடல் மீன் பிடித்தல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக புதிய சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், இதற்கான சட்ட முன்வடிவை மாநில அரசுகளுக்கு அனுப்பி கருத்துக் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் ஆழ்கடல் தொடர்பான மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிபோகும் அபாயம் ஏற்படும். மேலும், விசைப்படகு மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரமும் மத்திய அரசின் வசம் சென்றுவிடும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின்படி இதுவரை, ஆழ்கடலில் 12 நாட்டிக்கல் மைல் வரையிலான கடற்பரப்பில் மீன்பிடி உரிமை வழங்குதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மாநில அரசு வசம் இருந்து வருகிறது.
இந்நிலையில், புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க, விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசின் வசம் கொண்டு வர பா.ஜ.க முயற்சித்து வருகிறது.
இதன் மூலம் எல்லைக் கட்டுப்பாடின்றி பெரு நிறுவனங்கள் மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுவிடும். மேலும், மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டால் காலங்காலமாகச் செய்து வரும் மீன்பிடித் தொழில் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!