India
நியூட்டன் எல்லாம் சும்மா..புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது இந்து முனிவர்கள் - கல்வி அமைச்சர் பேச்சு !
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சாமியார் பாபா ராம் தேவின் நண்பர் பாலகிருஷ்ணன், ஐ.ஐ.டி, மற்றும் என்.ஐ.டி. தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், பண்டையகால அறிவு மற்றும் மருத்துவ உத்தி குறித்து என்.ஐ.டி, ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். புவி ஈர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்பே இந்து மத வேதங்களில் புவி ஈர்ப்பு விசை குறித்து எழுதப்பட்டுள்ளது இவற்றையும் நிரூபிக்க ஆய்வு நடத்த வேண்டும் என ரமேஷ் போக்ரியால் பேசியுள்ளார்.
முன்னதாக, மும்பை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பேசிய ரமேஷ் போக்ரியால் ஆயுர்வேத மருத்துவங்களில் சிறந்து விளங்கிய சரகா முனிவர்தான் அணு மற்றும் மூலக்கூறுகளை கண்டுபிடித்தவர். அதன் அடிப்படையிலேயே தற்போது விஞ்ஞான வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்றார்.
இந்து மதத்தையும், சமஸ்கிருத மொழியையும் நாட்டில் உள்ள அனைவரிடத்திலும் திணிப்பதற்காக மத்திய பா.ஜ.க அரசு முன்னெடுத்து வருகிறது என பலராலும் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பேச்சு அதனை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிகிறது.
Also Read
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
-
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!
-
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசு : மாநிலங்களின் தலையில் கூடுதல் நிதிச்சுமை!
-
“We Will Never Allow You...” : பாசிச கலவர சக்திகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!