India
“காஷ்மீர் விவகாரத்தில் அரசின் முடிவு ஜனநாயக விரோதமானது” - வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி!
காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகளவிலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய விவாதப் பொருளாகி வருகிறது. அண்டை நாடான பாகிஸ்தான், இந்தியாவுடனான உறவுகளை ஒன்றொன்றாக முறித்து வருகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இந்திய திரைப்படவிழா நடைபெற்றது. இதில், தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், விஜய்சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விஜய் சேதுபதி, தியாகராஜா குமாரராஜா, நடிகை காயத்ரி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர்.
அப்போது ஆஸ்திரேலியாவின் தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் விஜய்சேதுபதி, காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்விக்கு பதிலளித்தார். “ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. பெரியார் அன்றைக்கே சொல்லிவிட்டார். காஷ்மீரின் பிரச்னைகளுக்கு அந்த மக்கள்தான் முடிவெடுக்க முடியும். உங்கள் வீட்டு விவகாரத்தில் நான் தலையிட முடியாது. ஏனெனில் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கே அதன் சூழ்நிலை தெரியும். ஆகையால் நான் அவர்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஆளுமை செலுத்தமுடியாது”. என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்
மேலும் தொடர்ந்த அவர் “ ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்ளும் போது, மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் மீது ஆளுமை செலுத்துவது முறையற்றது.” என விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.
இதே சமயத்தில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கும், அம்மாநிலத்தை இரண்டாக பிரித்ததற்கும் மோடி மற்றும் அமித்ஷாவின் செயல் பாராட்டுக்குரியது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் பெரியாரை படித்தவருக்கும் கீதையை படித்தவருக்குமான வித்தியாசம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!