India
‘நீங்க கோவிலுக்குள்ள வரக்கூடாது’ துப்புரவு தொழிலாளர்களை வெளியே தள்ளிய அர்ச்சகர் : வெகுண்டெழுந்த மக்கள்
நாடு முழுவதும் தலித் மக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் தீண்டாமை, சாதிய பாகுபாடு என தலித் மக்கள் மீதான ஒடுக்கு முறை தொடர் கதையாகியுள்ளது.
இதுபோல குற்றச்செயலில் ஈடுபடுவர்களின் மீது போதிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அதனால் அவர்கள் மேலும் மேலும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையை பிரயோகிப்பதற்கு வசதியாக அமைக்கிறது. தீண்டாமை கொடிய குற்றம் என அரசியலமைப்பு சட்டம் சொன்னாலும் பா.ஜ.க ஆளும் மாநிலம் அதனை மதிப்பது கிடையாது. அதற்கு தற்போது ஒரு சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள தானா பவன் நகரில் உள்ள கோவில் சில துப்புரவு பணியாளர்கள் அங்குள்ள வடிகாலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தண்ணீர் தாகம் எடுத்ததால், கோவில் வளாகத்தில் உள்ள குடிநீர் பம்ப்பில் தண்ணீர் இருக்கும் என நினைத்து அங்கு சென்றுள்ளனர்.
இதனை பார்த்த அந்த கோவில் அர்ச்சககர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அர்ச்சகர் ஒருவர் “நீங்கள் உள்ளே வரக்கூடாது, உங்களுக்கு குடிநீர் எடுக்க அனுமதி இல்லை” என்று கூறி வெளி்யே தள்ளி கதவை மூடியுள்ளனர். இதனால் துப்புரவு தொழிலாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இதனை அவர்கள் அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளனர். வால்மீகி பிரிவைச் சேர்ந்த தலித் மக்கள் ஒன்று திரண்டு அந்த கோவில் அர்ச்சகர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது தீண்டாமை வன்கொடுமை செய்த அர்ச்சகர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பின்னர் துப்புரவு பணியாளர்கள் கோரிக்கையின் பேரில் விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்போதாக போலீஸ் அதிகார்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் போராட்டக்காரர்களை போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள முற்போக்கு அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நாடு முழுவதும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?