India
நாய்களுக்கு பயந்து வீட்டுக்குள் புகுந்தவரை திருடன் என நினைத்து எரித்த மக்கள்!
உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டத்தில் 28 வயதான தலித் இளைஞர் குமார் வியாழக்கிழமை இரவு தனது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தெரு நாய்களால் துரத்தப்பட்ட அவர், தப்பிப்பதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்தார்.வீட்டில் வசிப்பவர்கள் அவரை திருடன் என்று தவறாக நினைத்து அவரைத் தாக்கி, அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரிக்க முயன்றதாக போலீஸார் கூறினர். உயிருடன் ஒருவரை எரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமார் முதுகில் தீக்காயங்கள் ஏற்பட்டு லக்னோவின் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Also Read
-
“விஜய்க்கு சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லை” : தாராபுரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
-
Party Fund வாங்கிய த.வெ.க?; நீதிமன்றத்தில் அம்பலப்பட்ட மெகா ஊழல் : ஆர். எஸ்.பாரதி அறிக்கை!
-
முடங்கியுள்ள பொருளாதாரம் ; த.வெ.க அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? - தங்கம் தென்னரசு கேள்வி!
-
“பணத்தைக் கொடுத்து ஓட்டுகளையும் விலைக்கு வாங்க தூய சக்தி விஜய்” : DMK IT WING விமர்சனம்!
-
படுதோல்வியடைந்த தவெக.. அமோக வெற்றி பெற்ற திமுக.. கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன தேர்தலில் நடந்தது?