India

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க பச்சைக் கொடி காட்டினார் குமாரசாமி!

டெல்லியில் கடந்த மாதம் 25ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையிலான 4வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

காவிரி நீரை திறந்து விடுவது குறித்து இன்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.

அனைத்து மாநில பிரதிநிதிகளின் வாதங்களையும் கேட்டறிந்த காவிரி மேலாண்மை ஆணையம், "காவிரியில் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும் எனவும், நீர்வரத்து மற்றும் மழையை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்" என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி. இது குறித்து அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பலன்பெறும் வகையில் காவிரியில் இருந்து நீரை திறந்துவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.