India
வங்கி, ரயில்வே துறைத் தேர்வுகளை தமிழ் மொழியிலும் இனி எழுதலாம் - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ரயில்வே மற்றும் வங்கித்துறைத் தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் அறிவித்தார்.
ரயில்வே மற்றும் வங்கித்துறையில் பணியாற்றுவதற்கான தேர்வுகளில் இதுகாறும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டு வந்தன.
இந்நிலையில், நாளை (ஜூலை 5) 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இது அவரது முதல் பட்ஜெட்.
அதற்கு முன்னதாக, இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். அப்போது பேசிய அவர், இனி வங்கி மற்றும் ரயில்வேத்துறை பணியாளர்களுக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என அறிவித்தார்.
இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பை பெறமுடியும்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!