India
நிதி அமைச்சரை சந்தித்து தாழ்த்தப்பட்டோருக்கான திட்டங்களை வலியுறுத்திய வி.சி.க எம்.பி.,கள்!
தொல்.திருமாவளவன், ரவிக்குமார் ஆகிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கான திட்டங்கள் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து, ட்விட்டரில் பதிவு செய்துள்ள ரவிக்குமார் எம்.பி, தமிழகத் திட்டங்கள் தொடர்பாகவும், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட எஸ்.சி / எஸ்.டி மக்களுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் 19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், விழுப்புரத்தில் நகைத் தொழிலாளர்களுக்கான பூங்கா அமைத்தல், உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் துவக்குதல், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட விழுப்புரம் தொகுதி தொடர்பாக விரிவாக எடுத்துரைத்ததாகவும், நிச்சயம் உதவுவதாக நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளதாகவும் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!