India
ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டம் : பா.ஜ.க அரசு முயற்சி!
நாடு முழுவதும் ஒரே நாடு -ஒரே குடும்ப அட்டை என்னும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மத்திய மாநில அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற மாநில உணவுத்துறை செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,இந்த திட்டத்தின் மூலம் நுகர்வோர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த நியாயவிலை கடையிலும் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள முடியும் என்றார்.
ஸ்மார்ட் கார்டு மூலம் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் நுகர்வோர் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இந்த திட்டம் கொண்டுவரப்பட இருப்பதாக கூட்டத்தில் பேசிய ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக அடுத்த ஆறு மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள உணவு தானிய கிடங்குகளை முதலில் இணையதளம் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்த போவதாக ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பெற்றுக் கொள்ளலாம் என்கிற நடைமுறை இருக்கிறது. இதைப் போன்று நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்படும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் கூறியிருக்கிறார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!