India
நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் இருந்த நகராட்சி அதிகாரியை பா.ஜ.க எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா பலர் முன்னிலையில் கடுமையாகத் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி அதிகாரிகள் இந்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருந்தபோது தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆகாஷ், கிரிக்கெட் மட்டையைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்றுள்ளது. செய்தியாளர்கள் வாக்குவாதத்தைப் படம் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ கிரிக்கெட் மட்டையால் தாக்கிய காட்சியும் பதிவாகியுள்ளது.
இந்தூர்-3 தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான ஆகாஷ் விஜய்வர்கியா, பா.ஜ.க மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆவார். அரசு அதிகாரியைத் தாக்கியதற்காக பா.ஜ.க எம்.எல்.ஏ உட்பட 11 பேர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
மும்பையில் நடைபெறும் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025!’ : தமிழ்நாடு அரசு பங்கேற்பு! - முழு விவரம் உள்ளே!
-
குளத்தில் குதித்த காதலன் : காப்பாற்ற முயன்ற காதலி - நடந்தது என்ன?
-
ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும் : பொதுமக்களிடம் பண மோசடி - அ.தி.மு.க நிர்வாகிகள் கைது!