India
பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது!
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மற்றும் கயா ஆகிய பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மற்றும் ஜப்பான் என்சபிலிட்டிஸ் என்ற இரு வகையான மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த மூளைக்காய்ச்சலால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த மூளைக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பீகாரில் குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மேலும், சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு குழந்தைகளின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில், முசாபர்பூரில் மட்டும் அரசு மருத்துவமனையில் 109 பேரும் கெஜ்ரிவால் அரசு மருத்துவமனையில் 20 பேரும் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ED-க்கு ரூ.2 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
”எங்கள் பேரணியை பார்த்து பா.ஜ.க பயத்தில் உள்ளது” : RJD தலைவர் தேஜஸ்வி பேட்டி!
-
“தமிழ்நாடு மக்களின் அன்போடு புறப்பட்டுச் செல்கிறேன்!” : பயணத்தின் தொடக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் : அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்!
-
ஜெர்மனி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : ஒரு வார கால அரசுமுறைப் பயணம்!