India
பீகாரை அச்சுறுத்தும் மூளைக் காய்ச்சல் : 128 குழந்தைகள் பரிதாப பலி!
பீகாரில் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளில் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ளது. அதிக காய்ச்சல், வலிப்பு மற்றும் தலைவலி போன்றவை மூளைக்காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஹுட்ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் 115 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது.
கடும் வெயிலால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்திக் கொண்டு, வரும் 24ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்பது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறைக்கும், பீகார் மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பீகார் நிலவரம் குறித்து உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 128 குழந்தைகள் பலியாகியுள்ளனர். குழந்தைகள் இந்த தொடர் மரணத்தால் மக்கள் அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?