India
17-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு!
542 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.,11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். பின்னர், அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.
இதனையடுத்து, 17-வது மக்களவையின் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் 2 நாட்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.பி-களாக பதவியேற்றனர். இவர்களுக்கு தற்கால சபாநாயகராக இருந்த வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இன்று மக்களவையின் அவைத் தலைவராக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியின் எம்.பியாக உள்ள ஓம் பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலத்தில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து மக்களவையில் புகழாரம் சூட்டினார்.
Also Read
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!
-
“சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை” : தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
-
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!