India
மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கும் மு.க.ஸ்டாலின், மம்தா!
பிரதமர் மோடி தலைமையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 5-வது பொதுக்கூட்டம் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நடைபெற்ற இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை. மேலும், மாநிலத்திற்கு எந்த நிதி பலனையும் நிதி ஆயோக் தராததால், கூட்டத்தை புறக்கணிப்பதாகத் தெரிவித்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையைக் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, இன்று பிற்பகலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில்நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறையை தொடக்கத்திலிருந்து எதிர்த்து வரும் தி.மு.க இக்கூட்டத்தைப் புறக்கணிக்கும் எனத் தெரிகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இக்கூட்டத்தைப் புறக்கணிக்கிறார். தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசிய வாத காங்கிர தலைவர் சரத் பவார் ஆகியோரும் இக்கூட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள்.
Also Read
-
“அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி” : அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
-
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை மெட்ரோவுடன் இணைப்பது எப்போது? - கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
"திராவிட மாடல் ஆட்சியில் கோயம்புத்தூர், மதுரை IT நகரங்களாக உருப்பெறுகிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
இனி பேரிடர் குறித்து கவலையில்லை... நாசாவுடன் சேர்ந்த இஸ்ரோ : விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் !
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : "நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" - உச்சநீதிமன்றம் கருத்து !