India
சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவது எப்போது? - இஸ்ரோ அறிவிப்பு!
நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலத்தை வடிவமைத்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். சந்திராயன் 2 விண்கலத்தை உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வரும் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலம் சந்திராயன் 2 செயற்கைகோள் வருகிற ஜூலை மாதம் 15ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ சிவன், “3.8 டன் எடைக்கொண்ட சந்திராயன் 2 விண்கலம், நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளுடன் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. இதில் அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ரோவர் கருவி நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யவுள்ளது என்றும், உலக அளவில் எந்த நாடும் செய்திராத முயற்சியை இஸ்ரோ மேற்கொள்ளவுள்ளது என்றும்” அதன் சிவன் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !