India
டெல்லியை பாதுகாக்க 5 அடுக்கு கவச பாதுகாப்பு!
இந்தியாவின் தலைநகராக விளங்கும் டெல்லி, இந்திய எல்லைக்கு அருகே உள்ளதால், எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் டெல்லி மக்களின் பாதுகாப்பையும், முக்கிய சின்னங்களையும் பாதுகாக்க, ஏவுகணை தடுப்பு கவசம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லியின் பாதுகாப்புக்காக ஏவுகணை தடுப்புக் கவசம் அமைப்பதற்காக அமெரிக்காவிடமிருந்து ரூ.6 ஆயிரம் கோடி செலவில் ஏவுகணை எதிர்ப்பு தடவாளங்கள் வாங்கப்பட உள்ளன.
ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு கவசம் 5 அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும். முதல் அடுக்கு டெல்லியின் புறநகர் பகுதியில் அமையும். இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை முறியடிக்கும் அமைப்பு இருக்கும்.
இரண்டாம் அடுக்கு டெல்லியை சுற்றியிருக்கும். மூன்றாம் அடுக்கில் பாரக் ரக ஏவுகணைகள் இருக்கும். பாரக் ஏவுகணைகள் விமானங்கள், கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை கொண்டவை. டெல்லியின் பாதுகாப்பை உறுதி செய்யும் நான்காவது வளையத்தில் ஆகாஷ் ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும்.
நான்கு அடுக்குகளையும் காக்கும் ஐந்தாம் அடுக்கில் நாசாம்ஸ் ரக ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த 5 பாதுகாப்பு வளையங்களின் மூலம் டெல்லியை முழுமையாக காப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Also Read
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லை : பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!” : ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழ்நாடு அரசின் முடிவால் செவிலியர்கள் மகிழ்ச்சி!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!