India
ரமலான் பண்டிகை: நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்!
இஸ்லாமியர்களில் 5 முக்கிய கடமைகளின் ஒன்றான ரமலான் நோன்பு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது.
வானில் பிறை தென்பட்டதால் மத்திய கிழக்கு நாடுகளாக சவுதி, கத்தார் போன்ற அரபு நாடுகளில் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, நேற்று மாலை தமிழகத்தின் பிறை தெரிந்ததால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் ஈகை பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
இதனையொட்டி, காலை முதலே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சென்னை திருவல்லிக்கேணியில் இன்று காலை நடந்த சிறப்பு தொழுகையில் வாழ்த்துகளையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர்.
இதேப்போல், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.
Also Read
-
ஆளத் தெரியாதவருக்கு தலைமைச் செயலகம் எதற்கு? : முதலமைச்சர் விஜயை சாடிய முரசொலி!
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?