India
டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது!
மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளிவந்ததில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அக்கட்சியே மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க உள்ளது.
இதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கணிசமான வாக்குகளே பெற்றிருந்தாலும், தமிழகத்தில் திமுக உடனான கூட்டணியில் தங்களது வெற்றியை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்குட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மூத்தத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் உ.பி. பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மற்றும் மூத்தத் தலைவர்களான குலாம் நபி ஆசாத், அகமது பாட்டீல் பங்கேற்றுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் முதலமைச்சர்களான நாராயணசாமி, கேப்டன் அம்ரீந்தர் சிங், அசோக் கெலோட் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தேசிய செயலாளர்கள், காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!