India

உச்சநீதிமன்றத்திற்கு 4 நீதிபதிகள் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

சுப்ரீம் கோர்ட்டிற்கு சூரியகாந்த், அனிருதா போஸ், போபண்ணா, எஸ்.ஆர். கவாப் ஆகிய 4 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார். 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் உள்ள 31 நீதிபதிகள் பணியிடங்களும் நிரம்பின. இனி நீதிபதி காலி பணியிடம் இல்லை.

உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 4 பணியிடங்களுக்கு சூரியகாந்த், அனிருதா போஸ், போபண்ணா, எஸ்.ஆர். கவாப் ஆகிய 4 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 27 பேராக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

அனிருதா போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக தனது பணியைத் தொடங்கியவர். தற்போது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். தேசிய அளவில் நீதிபதிகளுக்கான பதவி மூப்பு பட்டியலில் 12-ஆவது இடத்தில் உள்ளார்.

ஏ.எஸ்.போபண்ணா கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக தனது பணியைத் தொடங்கியவர் , இவர் தற்போது கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். தேசிய அளவில் நீதிபதிகளுக்கான பதவி மூப்பு பட்டியலில் அவர் 36-ஆவது இடத்தில் உள்ளார்.

நீதிபதி கவாய் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், நீதிபதி சூரியகாந்த், இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளனர்.

இதனால் தற்போது காலிப்பணியிடங்கள் எதுவும் இல்லை. இனி தீர்ப்புகள் நிலுவையில் இருக்காது என வழக்கறிஞர்கள் பலர் கருத்து தெரிவிக்கினறனர்.

கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்ததையடுத்து, தகுதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று மே 9-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.