India
மேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு நாளை மறு வாக்குப்பதிவு !
நாடாளுமன்றத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவுகள் கடந்த மே 19ம் தேதி நடந்து முடிவடைந்தது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள உத்தர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 200ம் எண் வாக்குச்சாவடிக்கு மட்டும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
200ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்பட இருக்கிறது. எனவே இதற்காக வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 123வது வாக்குச்சாவடிக்கும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
Also Read
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!