India
புதுவடிவம் பெறுகிறது ரூபாய் நோட்டுகள்... ஆர்.பி.ஐ. அதிர்ச்சி தகவல்...
2016ம் ஆண்டு நவம்பர் 8 அன்று 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிட்டு அதற்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ததால் சில்லறை தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் சரிவு ஏற்பட்டது.
பின்னர் 500,200,100,50,10 என வரிசையாக பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸின் கையெழுத்து புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் இல்லாததால் அவரது கையெழுத்துடன் கூடிய புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என ஆர்.பி.ஐ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.பி.ஐ. ஆளுநரின் கையெழுத்து இடம்பெற்றுள்ள ரூ.200,500 நோட்டுகளின் வடிவத்திலும் மாற்றம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுவரை 20 ரூபாய் நோட்டு மட்டும் புது வடிவம் பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!