India
ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி கைது
தேடப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது (JeM) அமைப்பு தீவிரவாதியை ஸ்ரீநகரில் சிறப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியை சேர்ந்தவன் பையஸ் அகமது லோன்.
2000 ஆம் ஆண்டு மெளலானா மசூத் அசார் இக்குழுவைத் தொடங்கினான். இவன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தலின்போது விடுவிக்கப்பட்டவன். விடுதலைக்குப் பின் ஹர்கத்-உல்-முஜாகிதீன் போராளிக் குழுவிலிருந்து விலகி, இக்குழுவை ஆரம்பித்தான். ஹர்கத்-உல்-முஜாகிதீன் இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் இவனது ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்தில் இணைந்தனர்.
2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் இப்போராளிக் குழுவை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் தடை செய்தார். தடையின் காரணமாக இக்குழு தனது பெயரை குத்தாம் உல்-இஸ்லாம் (Khuddam ul-Islam) என மாற்றிக் கொண்டது. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அமைப்பு இது.
இந்நிலையில் தற்போது தேடப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது (JeM) அமைப்பு தீவிரவாதியை ஸ்ரீநகரில் சிறப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியை சேர்ந்தவன் பையஸ் அகமது லோன்.
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த இவனது தலைக்கு 2 லட்சம் பரிசுதொகை அறிவித்து, கடந்த 2014ம் ஆண்டு முதல் டெல்லி போலீஸ் தேடி வந்தது.இந்நிலையில் ஸ்ரீநகரில் தலைமறைவாக இருந்த அவனை, டெல்லி தனிப்படை பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!